48 மணி நேரத்தில் 10 விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

கடந்த 48 மணி நேரத்தில் 10 இந்திய விமானங்களுக்கு சமூக ஊடகம் மூலம் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெய்ப்பூரிலிருந்து அயோத்தி வழியாக பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தர்பங்காவிலிருந்து மும்பை செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம், பாக்தோக்ராவிருந்து பெங்களூரு செல்லும் ஆகாஸா ஏர் விமானம், தில்லியிலிருந்து சிகாகோ செல்லும் ஏர் இந்தியா விமானம், மதுரையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உள்ளிட்ட 10 விமானங்களுக்கே இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல்களை வெளியிட்ட பல கணக்குகள் அடையாளம் காணப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் லண்டன் மற்றும் பிற நாடுகளிலிருந்து சில அச்சுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்