இராணுவத்தின் 75 ஆவது தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் குடும்பத்தினருக்கு நிரந்தர வீடு
-யாழ் நிருபர்-
இராணுவத்தின் 75 ஆவது தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் புதிதாக நிரந்தர வீடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ். பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவின் எண்ணக் கருவுக்கு அமைவாக 55 வது காலாட் படை பிரிவின் வழிகாட்டலுக்கு அமைவாக தேசியப் பாதுகாப்பு படையினரால் குறைந்த வருமானம் தரும் குடும்பத்தினருக்கு கிளிநொச்சி பனங்கண்டி பகுதியில் புதிதாக வீடு ஒன்று நிர்மாணித்து கையளிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரி விக்கும் லியனுகேவினால் இன்றைய தினம் புதன் கிழமை வீடு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
