
விகாரைக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து 2 சடலங்கள் மீட்பு!
பாணந்துறை – கல்கொட ஸ்ரீ மகா விகாரைக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
47 வயதுடைய ஆண் ஒருவரினதும், 42 வயதான பெண் ஒருவரினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
சடலமாக மீட்கப்பட்ட ஆண், பெண்ணை கொலை செய்து விட்டு, பின்னர் தமது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
