
அரியநேத்திரன் உட்பட மூவர் தேர்தல் செலவு அறிக்கைகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை!
தேர்தல் பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையைத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
எனினும், பாக்கியசெல்வம் அரியநேத்திரன், பத்தரமுல்லே சீலரதன தேரர் மற்றும் சரத் கீர்த்திரத்ன ஆகிய வேட்பாளர் தங்களது தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, தேர்தல் பெறுபேறுகள் வெளியாகி, 21 நாட்களுக்குள் செலவு அறிக்கையை வழங்க வேண்டும்.
இதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
