வெடிகுண்டு மிரட்டல் : நியுயோர்க் சென்றுகொண்டிருந்த விமானம் திருப்பப்பட்டது!
இந்தியாவின் மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பு காரணத்தை அடுத்து இன்று காலை டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானம் இன்று அதிகாலை அமெரிக்காவின் நியுயார்க்குக்கு புறப்பட தயாராக இருந்தது.
விமானம், 239 பேருடன், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன
அங்கு பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.