இந்த வருடம் 15 இலட்சத்து 21 ஆயிரத்து 685 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை

இந்த மாதத்தின் கடந்த 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 36,877 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவிலிருந்து 10,857 பேரும் சீனாவிலிருந்து 3,105 பேரும், ஜேர்மனியிலிருந்து 2,425 பேரும் நாட்டுக்கு பிரவேசித்துள்ளனர்.

அதேநேரம், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 15 இலட்சத்து 21 ஆயிரத்து 685 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.