மகளின் கணவரை தாக்கி கொலை செய்த நபர் கைது!

பலாங்கொடை பகுதியில் தமது மகளின் கணவரை தாக்கி கொலை செய்த 65 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

சம்பவத்தில் பலாங்கொடை தஹமான பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

அவரை தாக்கிக் கொலை செய்த அவரது மனைவியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.