சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதியான கார் அரசுடைமையானது!

லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைப்பற்றப்பட்ட சொகுசு ரக கார் ஒன்றை அரசுடைமையாக்குவதற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
லஞ்சம்  மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலியான தகவல்கள் வழங்கப்பட்டு குறித்த கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனூடாக அரசாங்கத்துக்கு ஐந்தரைக் கோடி ரூபாவுக்கும் அதிக வரி வருமானம் இல்லாமல் போயுள்ளதாகக் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் பதுளையில் உள்ள வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் குறித்த காரை பறிமுதல் செய்து அரசுடைமையாக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.