தங்கச் சுரங்கத்தில் சிக்கி ஒருவர் பலி!

மேற்கு அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள பயன்படுத்தப்படாத தங்கச் சுரங்கத்தின் மின்தூக்கி செயலிழந்ததன் காரணமாக ஒருவர் பலியானதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஆபத்தான நிலையில் இருந்த 23 பேர் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலராடோ தங்கச் சுரங்கம் தற்போது தனியாருக்குச் சொந்தமான சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டுள்ளது.

12 பேரைக் கொண்ட இரண்டு சுற்றுலா பயணக் குழுக்கள் தங்கச் சுரங்கத்தினுள் இருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

அதில் ஒரு குழுவினர் 6 மணி நேரத்தின் பின்னரே மீட்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட அந்தக் குழுவில் சிறுவர்களும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மற்றொரு குழுவினர் அந்தத் தங்கச் சுரங்கத்தின் அடிப்பகுதியில் சிக்குண்டிருந்த போதிலும், பல மணி நேரத்தின் பின்னர் பாதிப்பின்றி மீட்கப்பட்டுள்ளனர்.