இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு

-மூதூர் நிருபர்-

இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் முதலில் புதிய ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவை வழங்குவேன் என நம்பிக்கை தெரிவித்தார். சுகாதாரம், கல்வி, மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நாம் செயல்படுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை இந்திய அரசாங்கம் மிகவும் நம்பிக்கையுடனும், மிகவும் பாராட்டுவதாகவும், அதற்கேற்ப, எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்துடனும் கிழக்கு மாகாணத்துடனும் இணக்கமாகச் செயற்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.