விவசாயம் செய்ய விடாது மக்களை விரட்டி அடித்த பிக்கு!
-மூதூர் நிருபர் –
திருகோணமலை -திரியாய் வளத்தாமலைப் பகுதியில் உள்ள உறுதி காணிகளில் மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைய காணி உரிமையாளர்கள் விவசாயம் செய்ய இன்று குறித்த பகுதிக்கு சென்றபோது பௌத்த பிக்குவினால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் எதிர்வரும் திங்கட்கிழமை குச்சவெளி பிரதேச செயலகத்தில் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுப்பதாகவும் அதுவரை எவ்வித விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என தெரிவித்ததாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடந்த திங்கட்கிழமை மாவட்ட செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது திரியாய் வளத்தாமலை பகுதியில் காணி ஆவணங்கள் உள்ள விவசாயிகள் விவசாயம் மேற்கொள்ளுமாறு தெரியப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.