ஞானசாரதேரரை கைது செய்வதற்கு பிடியாணை!

பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கொன்றின்போது நீதிமன்றத்தில் ஆஜராகாதமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது.

2014ம் ஆண்டு ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் முஸ்லீம்களின் மதநம்பிக்கைகளை அவமரியாதை செய்யும் விதத்தில் கருத்து தெரிவித்ததன் மூலம் ஞானசார தேரர் குரோத பேச்சினை வெளிப்படுத்தியிருந்தார் என அரசதரப்பு நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இந்த விடயம் நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டவேளை ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததை தொடர்ந்து அவரை கைதுசெய்வதற்கான பிடியாணையை நீதிபதி பிறப்பித்தார்.