கத்திக்குத்துத் தாக்குதல் : 6 பேர் காயம்!

இஸ்ரேலில் பொதுமக்கள் மீது இன்று நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் ஹடிரா நகருக்குள் புகுந்த பயங்கரவாதி ஒருவர் அங்கிருந்த பொதுமக்கள் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர், தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடிய பயங்கரவாதியை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.