படப்பிடிப்பிற்காக மட்டுப்படுத்தப்படும் ரயில் சேவை!

கொழும்பிலிருந்து பதுளை வரை இடம்பெறும் மலைநாட்டுத் ரயில் சேவை இன்று புதன்கிழமை முதல் எல்ல தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.

இதன்படி, முற்பகல் 7.30 முதல் பிற்பகல் 5.30 வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டுத் ரயில் மார்க்கத்தில் எல்ல மற்றும் தெமோதரை ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள 9 வளைவு பாலத்தில் இலங்கை – இந்தியக் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்படும் திரைப்பட ஒளிப்பதிவு நடவடிக்கைகளுக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் போக்குவரத்து அமைச்சின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்