காயங்களுடன் இறந்து கிடந்த காட்டு யானை!

-மூதூர் நிருபர்-

சம்பூர் பொலிஸ் பிரிவின் கணேசபுரம் கிராமத்தின் காட்டுப் பகுதியில் யானையொன்று இறந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை காலை காணப்பட்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த யானையின் உடம்பில் காயங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.யானையின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இது தொடர்பில் சம்பூர் பொலிஸார் சேருநுவர வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.