இடைத்தரகர்களே முட்டை விலை அதிகரிப்பிற்கு காரணம் : உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு!

இடைத்தரகர்களின் முறையற்ற செயற்பாடு காரணமாகவே, நாட்டில் மீண்டும் முட்டை விலை அதிகரித்துள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த வாரத்தில் 28 முதல் 32 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது 40 ரூபாயாக மீண்டும் அதிகரித்துள்ளது.

இடைத்தரகர்கள் முட்டைகளை சட்டவிரோதமாகப் பதுக்கி, முட்டைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதனாலேயே சந்தையில் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.எம் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பண்ணைகளில் குறைந்த விலைக்கே முட்டைகளைக் கொள்வனவு செய்கின்றார்கள். அதனை சந்தைக்கு 35 ரூபாய்க்குக் குறைந்த மட்டத்திலாவது விற்பனை செய்ய வேண்டும்.

எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.எம் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.