ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணை : ஜனாதிபதி உறுதி

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியர் தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் உறவினர்கள் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்