சூடானில் பாரிய இராணுவ நடவடிக்கை

சூடானில் உள்நாட்டு போர் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் தற்போது அந்நாட்டு இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக ஆப்பிரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

துணை இராணுவத்தின் வசம் உள்ள பகுதிகளை கைப்பற்றுவதற்காக இந்த பாரிய இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தலைநகர் கார்டூமின் வடக்கே உள்ள பாஹ்ரி பிராந்தியம் ஊடாக இராணுவத்தின் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

சூடானில் அந்நாட்டு இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் அதிகாரப் போட்டி காரணமாக அங்கு உள்நாட்டு போர் கடந்த இரண்டு வருடங்களாக இடம் பெற்று வருகின்றது.

இந்தப் போர் காரணமாக இரண்டு மில்லியனுக்கு அதிகமான மக்கள் அயல் நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்து பாரிய சுகாதார இன்னல்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்