இடைநிறுத்தப்பட்டிருந்தவற்றை மீள வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி !
ஜனாதிபதி தேர்தலின் போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெரும்போகத்திற்கான உர மானியம் மற்றும் மீனவர்களுக்கான எரிபொருள் மானியம், ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட நன்மைகளை மீள வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
செப்ரெம்பர் மாத நிலுவைத் தொகையுடன் ஒக்டோபரில் வழங்கப்படும் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு ஆட்சேபனை இல்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.