சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு பெரண்டினா களுவாஞ்சிக்குடி கிளை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையும் இணைந்து உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றினை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
திடீர் விபத்துக்கள்,சத்திர சிகிச்சைகளுக்கான அவரச தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இவ் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என்பதற்கமைவாக பெரண்டினா களுவாஞ்சிக்குடி கிளையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றதுடன் அதிகளவான இரத்ததான கொடையாளிகள் கலந்துகொண்டிருந்து சிறப்பித்திருந்தனர்.
இதன் போது பெரண்டினா பிரதேச முகாமையாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வினை வைத்தியசாலை ஊழியர்கள், பெரண்டினா ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்