இலவச விசா முறையை அமல்படுத்துவதில் தாமதம் ? அமைச்சர் பதில்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான இலவச விசா முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுவதால் இதற்கான தீர்வு காணப்படும் வரை அல்லது புதிய பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் வரை இந்த தாமதம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் இதனை செயற்படுவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடி வருவதாக அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.