அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளி : 100க்கும் மேற்பட்டோர் பலி!
அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளி காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், சூறாவளியில் சிக்குண்ட பலர் காயமடைந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் பலர் காணாமல் போயுள்ளதாகச் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெலன் சூறாவளி காரணமாக புளோரிடா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜோர்ஜியா ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20 இலட்சம் பேர்வரை மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
