
திருமலை மாணவிகள் தேசிய சாதனை
-மூதூர் நிருபர்- எம்.என்.எம்.புஹாரி
பொலன்னறுவையில் கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கிடையிலான 2024 தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் 17 வயது பிரிவின் கீழ் தி/சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி சி.கிசோத்திகா தங்கப் பதக்கத்தையும் ,20 வயது பிரிவின் கீழ் தி/சாம்பல்தீவு மகா வித்தியாலய மாணவி சி. கதுர்சிகா வெள்ளி பதக்கத்தையும் , தி/சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி வி.பிரீசா வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கும் திருகோணமலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.
இம் மாணவிளை கே.உமா சுதன் (பயிற்றுவிப்பாளர்) திறன்பட பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

