
கிளிநொச்சி கைதி ஒருவர் யாழ் வைத்தியசாலையில் உயிரிழப்பு – விசாரணைகளுக்கு உடன் பணிப்பு
யாழ்.சிறைச்சாலையின் தடுத்து வைக்கப்பட்டிருந்த 46 வயது கைதி ஒருவர் நேற்று சனிக்கிழமை அவசர மருத்துவ சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி ராமநாதபுரம், வட்டக்கச்சி பகுதியில் வசித்து வந்தவர் புஷ்பா (வயது-46) என்பவரே உயிரிழந்தவர் எனத் தெரியவருகின்றது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரியபண்டார மேலதிக விசாரணைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சாம்லி பலிஹேன, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் பரிசோதகர் இந்திக்க அபேகுணசேகர ஆகியோரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
