பிரித்தானிய இளைஞன் மிகப் பெரிய குஷ் போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் கைது

இலங்கை சுங்கப் பிரிவினர், இதுவரை இல்லாத வகையில், ‘குஷ்’ எனப்படும் கஞ்சாவின் மிகப் பெரிய கையிருப்பு பொதியினை விமானநிலையத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை காலை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ‘குஷ்’ எனப்படும் கஞ்சாவின் பெறுமதி ரூ. 43 மில்லியன் எனவும் இதனை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த 21 வயதான பிரிட்டிஷ் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL–403 இல் காலை 9:35 மணியளவில் வந்துள்ளார். சந்தேகத்திற்கிடமான நடத்தை காரணமாக அவர் கிரீன் சேனலில் கைது செய்யப்பட்டார். சோதனைக்குப் பிறகு, சுங்க அதிகாரிகள் அவரது இரண்டு பைகளில் 43 கிலோ 648 கிராம் குஷ் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

பிரித்தானியப் பிரஜையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.