அநுரவின் அதிர முடிவால் ஒய்வூதியத்தை இழந்த 85 எம்பிக்கள்

பாராளுமன்றம் குறித்த காலத்துக்கு முன்னரே கலைக்கப்பட்டதன் காரணமாக 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளதாக, நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஓய்வூதியத்தை இழந்த 85 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி நாடாளுடன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.

பாராளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதாந்த ஓய்வூதியம் 45,000 ரூபா இதுவரையிலும் வழங்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.