
மட்டக்களப்பு குருக்கள்மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல் -வீடியோ இணைப்பு-
மட்டக்களப்பு குருக்கள் மனம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில் இன்று வியாழக்கிழமை காலை 7:45 மணியளவில் இந்த தீச்சம்பவம் பதிவாகியுள்ளது.
குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது பின்னர் தீப்பரவல் சம்பவத்தினை கட்டுப்படுத்துவதற்கு, கிராம பொதுமக்கள் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் மண்முனை தென் எருவில் பற்று உதவி பிரதேச அதிகாரிகள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினுடைய நீர்தாங்கிபௌசர் மூலம் ஆரம்ப கட்டத்தில் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனினும் அந்நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
பின்னர் சம்பவ இடத்துக்கு குருக்கள்மடம் இராணுவத்தினர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
சுமார் 4 மணித்தியாலங்கள் போராட்டத்தின் பின்னர் 12.45 மணியளவில் இந்த தீச்சம்பவம் முற்றாக தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு குருக்கள்மடம் பறவைகள் சரணாலயம் கடந்த ஏப்ரல் மாதம் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தில் முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக இது காணப்படுகிறது.மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் கண்காணிப்பின் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
இப்பறவைகள் சரணாலயத்திற்கு இலட்சகணக்கிலான உள்நாட்டு,வெளிநாட்டு பறவைகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்தர்ப்பத்தில் பறவைகள் எதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பேராபத்து வராமல் பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுற்று சூழல் அதிகார சபை மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் என்பன மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


