பொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ஒதுக்கீடு

தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தலை நடத்துவதற்காக திறைசேரியில் இருந்து 11 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலை நவம்பர் 14ஆம் திகதி நடத்துவதாக அறிவித்தார்.

தேர்தல் ஆணையாளர் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க இது தொடர்பாக தெரிவிததுள்ளதாவது,

ஜனாதிபதிக்கு திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரம் உள்ள நிலையில் தேர்தலை நடத்துவது தொடர்பான செலவினங்களை ஈடுசெய்வதற்காக தனது அலுவலகம் 11 பில்லியன் ரூபாவை கோரியதாக தெரிவித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.