காட்டுக்கு தீ வைத்த நபர் கைது

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கினளன் தோட்டத்துக்கு அருகில் கடந்த 24 ஆம் திகதி காட்டு பகுதிக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை மேலும் ஒரு காட்டுப் பகுதிக்கு தீ வைக்க முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

எல்ல கினளன் தோட்டத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபர் காடுகளுக்கு தீ வைப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேக நபரை அவதானித்து போது அவர் மேலும் காடு ஒன்றுக்கு தீ வைக்க முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 24 ஆம் திகதி கினளன் தோட்ட வனப்பகுதி ஏற்பட்ட காட்டு தீயினால் சுமார் 15 ஏக்கர் காடு எறிந்து நாசமாகி உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

சந்தேக நபரை இன்றைய தினம் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்