
பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல்கள் உட்பட பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வரும்
பொதுத் தேர்தலுக்கு முன்னர் கூடுதல் விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும். ஈஸ்டர் தாக்குதல்கள், பத்திர ஊழல் மற்றும் பார் லைசென்ஸ் ஊழல்களுக்குப் பொறுப்பானவர்களின் பெயர் பட்டியல்களை நாங்கள் பெறுகிறோம் என, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு காலி முகத்திடலில் நிறுத்தி விட்டு சென்றுள்ள நிலையில் காணப்பட்டன அமைச்சுக்களின் முன்னாள் செயலாளர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான வாகனங்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
கடந்த அரசாங்கத்தின் போது பார் லைசென்ஸ்கள் 30-40 மில்லியனுக்கு விற்கப்பட்டதையும் அவர் எடுத்துரைத்தார்.
இதேவேளை உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும், ராஜபக்சக்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ரூ.10 முதல் ரூ.18 பில்லியனை மீட்க முடிந்தால், நாங்கள் கடன்களை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
