ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்கவை அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.

கலாநிதி நஜித் ஹம்பாந்தோட்டை ரன்ன மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மருத்துவராகவும், மருத்துவ அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.