இஸ்ரேலின் தாக்குதல் : 100 இற்கும் மேற்பட்டோர் பலி!

தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 182 பேர் வரையில் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் குறித்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது