
பல அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக பௌத்த பிக்கு ஒருவர் உட்பட பல அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.25 மணியளவில் நாட்டிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நேற்று சனிக்கிழமை 11.15 மணியளவில் தாய்லாந்துக்கு பயணமானார்.
வண. இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இன்று அதிகாலை 12.50 மணியளவில் ஹொங்கொங்கிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
