மட்டு.கல்லடி வீதிகளில் அயலவர்களின் மரங்களால் தொல்லை

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடிப் பிரதேசங்களில் உள் வீதிகளில் இருபக்கமும் வளர்ந்துள்ள தென்னை மற்றும் பலவித மரங்களால் தாம் சொல்லொண்ணாத துன்பத்தினை அனுபவித்து வருவதாக சம்பந்தப்பட்ட மக்கள் மாநகரசபை ஆணையாளரிடம் பலமுறை கோரிக்கைக் கடிதத்தைச் சமர்ப்பித்தும் பலன் ஏதும் கிடைக்கவில்லையென “மின்னல் செய்திச்சேவை” க்குக் கவலையோடு தெரிவித்தனர்.

இவ்வாறு வளர்ந்துள்ள மரங்களிலிருந்து அடிக்கடி தென்னை மட்டை மற்றும் தேங்காய்கள் வீழ்வதால் தாம் பயந்தே தமது வீதிகள் ஊடாகப் பயணிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் இம்மரங்களை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்