திருக்கோவில் குட்நிக் விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் இறுதிப்போட்டி

-திருக்கோவில் நிருபர்-

திருக்கோவில் குட்நிக் விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் இறுதிப்போட்டி நேற்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

இச்சுற்றுப்போட்டியானது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 28 அணிகளை உள்ளடக்கிய வகையில் இடம்பெற்றிருந்தது.

இறுதி போட்டிக்கு தெரிவான திருக்கோவில் குட்நி மற்றும் திருக்கோவில் அம்மன் விளையாட்டு கழகம் ஆட்டத்தில் கோல் எதுவும் போடப்படாத நிலையில் தண்டனை உதை (பெனால்டி) மூலம் திருக்கோவில் அம்மன் விளையாட்டு கழகத்தினர் 2024ஆம் ஆண்டின் சம்பியனாக தெரிவானதுடன் 50,000 பணப்பரிசினையும் வெற்றிக்கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் 2ஆம் இடத்தினை பெற்றுக்கொண்ட திருக்கோவில் குட்நிக் விளையாட்டு கழகத்தினருக்கு 30,000 ரூபாய் பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்