நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் குற்றபுலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யபட்டுள்ளார்
நிதி மோசடி வழக்கில் நாட்டைவிட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் டுபாயில் இருந்து இலங்கை வந்த பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கண்டியை சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரியும் போது 10.8 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
