தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

தெஹிவளை – கடவத்தை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

மோட்டார்சைக்கிளில் தலைக்கவசத்தினால் முகத்தை மறைத்து பிரவேசித்த 2 பேர் இன்று காலை இந்தத் தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 45 வயதான நபர், கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்