சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

நாடளாவிய ரீதியில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு சகல பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இன்றைய தினம் மூடப்படும் சகல பாடசாலைகளும், எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் எனக் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வாக்களிப்பு நிலைய நடவடிக்கைகளுக்குத் தேவையான மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும், அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கான சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, மீண்டும் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்