வாக்களிக்க செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்
வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடாத விடயங்கள் குறித்து வாக்காளர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளனர்.
குறித்த அறிவுறுத்தலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்இ “குடிமக்கள் வாக்களிக்க செல்லும் போது நிதானமாக இருக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. காலையில் மது அருந்திவிட்டு வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியாமல்இ முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்கள் இருப்பதை நம் அனுபவத்தில் பார்த்துள்ளோம்.
மேலும்இ வாக்குச்சாவடிகளில் உள்ளவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாக்குச்சாவடிக்கு வர வேண்டும்.சிலர் கூரிய ஆயுதங்கள் மற்றும் சிறு கத்திகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வாக்களிக்க வரும் சம்பவங்களை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். ஒரு வேளை நீங்கள் வேலைக்குச் சென்று வாக்களிக்க செல்வீர்களானால் இது போன்ற செயல்களைச் செய்யாதீர்கள்.
எனவே இது போன்ற சிறிய சம்பவம் வாக்குச்சாவடியை சீர்குலைத்தால்இ அது முழு வாக்குப்பதிவு செயல்முறையையும் தடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
