பிரசாரங்களுக்கு இன்று நள்ளிரவுடன் தடை
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இன்று புதன் கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம், பேரணி, துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய கொழும்பு, நுகேகொடை, கொட்டாவை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசார கூட்டங்களுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறும் இடங்களை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துக் கொள்வதற்காக, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.
மேலும் குறித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்ர் தெரிவித்துள்ளனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
