
மட்டக்களப்பு வாக்கெண்ணும் நிலையத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கள ஆய்வு.
-மட்டக்களப்பு நிருபர்-
இலங்கை ஜனநாயக குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்கெண்ணும் நிலையமான மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கள ஆய்வில் மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக உரிய திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம்.சுபியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
