கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட 4 பொலிசார் கைது

கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினூள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணத்தை திருடியதாக சந்தேகத்தின் பேரில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புளுமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான நான்கு பொலிசாரும் முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வீட்டு உரிமையாளரை அச்சுறுத்தி 1.4 மில்லியன் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்