உலகின் மிக வயதான பூனை உயிரிழப்பு

உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஸி (வயது – 33) என்ற பூனை உயிரிழந்தது.

1991இல் பிறந்த ரோஸி கடந்த ஜூன் முதலாம் திகதி ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது.

வயது மூப்பு காரணமாக இங்கிலாந்தின் நார்விச் நகரில் உள்ள அவரது உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 ஆண்டுகள் வாழ்ந்த ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்