சர்ச்சைக்குரிய தங்கச் சுரங்கம்: 30 பேர் பலி – ஊரடங்கு அமுல்
பப்புவா நியூ கினியாவில், இரண்டு பழங்குடி குழுக்களுக்கிடையே சர்ச்சைக்குரிய தங்கச் சுரங்கம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 30 பேர் பலியானதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வன்முறையுடனான மோதல் சம்பவங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில் பாதுகாப்பு தரப்பினருக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மதுபான விற்பனைக்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இரவு நேர ஊரடங்கு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய தங்கச் சுரங்கத்தை அண்மித்த காணி தொடர்பாகக் கடந்த மாதம் முதல் இரு பழங்குடி இனங்களுக்கு இடையே மோதல் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
