
மட்டக்களப்பில் பறங்கியர் சமூகத்தின் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வு
-மட்டக்களப்பு நிருபர்-
கிழக்கு மாகாண பறங்கியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பறங்கியர் சமூகத்தின் பாரம்பரிய கலை கலாசாரத்தை முன்னிலைபடுத்தும் 2024 ஆம் ஆண்டுக்கான பாரம்பரிய நிகழ்வின் இறுதி நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பறங்கியர் சங்கத்தினால் பறங்கியர் சமூகத்தின் பாரம்பரிய கலை கலாசாரத்தை முன்னிலைப்படுத்தி வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வின் ,2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வுகள் ஜூலை 21 ஆம் திகதி முதல் செம்டம்பர் மாதம் 15 திகதி வரை தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் நடத்தப்பட்டன
இதன் இறுதி நிகழ்வு மட்டக்களப்பு பறங்கியர் சங்கத்தின் தலைவர் டெர்ரி ஸ்டாக்ஸ் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி டச் பார் இக்னேசியஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனும்,சிறப்பு அதிதிகளாக அருட்தந்தை ரோசைரோ அடிகளார், அருட்தந்தை நவரெட்னம் நவாஜி அடிகளார், கல்லடி 243 ஆவது இராணுவப் படைப்பிரிவு கட்டளை அதிகாரி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க மற்றும் அருட் தந்தையர்கள்,பறங்கியர் சங்க உறுப்பினர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
