அதிவேக நெடுஞ்சாலையில் மின்கம்பிகளை வெட்டியவர் கைது

அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை வெளியேறும் பகுதிக்கு அருகில் நிலத்தடி மின் கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி – வனவாசல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இரவுநேர ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு வத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேகநபரிடம் இருந்து 14 அடி நீளமுள்ள இரண்டு செப்பு கேபிள்கள் மற்றும் கேபிள்களை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்