வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுரம் ஆழயவார் ஆலய தேர் உற்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுரம் ஆழயவார் ஆலய தேர் உற்சவம் இன்று திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

காலை 7 மணியிலிருந்து விசேட பூசைகள் இடபெற்று அதனை தொடர்ந்து வசந்த மண்ட பூசை இடம் பெற்று தொடர்ந்து 9:30 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னேவர தொடர்ந்து விநாயகரும் அவரை தொடர்ந்து மகாலக்ஷ்மியும் தொடர்ந்து வர வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் பெருந்தேரில் வலம்வந்தார்.

கடந்த 02-09-2024 அன்று கொடியேற்றம் பெருந்திருவிழா ஆரம்பமாகி இன்று 15 ஆம் திருவிழாவான தேர்த்திருவிழாவிற்க்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் அடியவர்கள் பல்லாயிரம் பேர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பல அடியார்கள் தூக்கு காவடி, பால்க்காவடி, அங்க பிரதஸ்டை, பால்குடம் போன்ற பல்வேறு நேற்றிக்கடன்களையும் நிறைவேற்றினர்.

இதேவேளை மக்களுக்கு உரிய சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் வழங்கியிருந்ததுடன் மக்களிறக்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை பருத்தித்துறை போலீசாரும் மேற்கொண்டிருந்தனர்.

மேலும் நாளைய தினம் பிற்பகல் 3 மணியளவில் சமுத்திர தீர்த்த உற்சவமும் இடம் பெறவுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்