
இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையும் அரியநேந்திரனுக்கு ஆதரவு
-யாழ் நிருபர்-
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையும் தமிழ் பொது வேட்பாளர் அரியனேந்திரனுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானத்தை எடுத்துள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையின் கூட்டமானது நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை, தொகுதிக் கிளையின் தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தமிழ்ப்பொது வேட்பாளர் குறித்தான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்நிலையில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரான அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
