நுவரெலியாவில் மீண்டும் ரணில்: தேர்தல் பிரச்சார கூட்டம்
-நானுஓயா நிருபர்-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில்இ 2024 ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்ஹவை ஆதரித்து நுவரெலியா பிரதான நகரில் மணிக்கூட்டு கோபுரம் அமைந்துள்ள கவிதாஸ் வாகன தரிபிடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை “இயலும் ஸ்ரீலங்கா” “வேண்டும் ரணில், மீண்டும் ரணில்” ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
இப்பிரச்சார கூட்டம் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானின் தலைமையில் நடைபெற்றது இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.
மேலும் கிழக்கு மாகாண ஆளுனரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் , முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சப்ரகமுவ மாகாண ஆளுனர் நவீன் திசாநாயக்க உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்ரஸின் முக்கியஸ்தர்கள் முன்னாள் நுவரெலியா மாநகரசபையின் நகர முதல்வர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்டத் தலைவிமார்கள், தோட்டத் தலைவர், தலைவிமார்கள் உட்பட பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
இப் பிரச்சார கூட்டமானது நுவரெலியா மாவட்டத்தினை மையமாக கொண்டு நடைபெற்றமையால் நகர்ப்புற மற்றும் தோட்டங்களை உள்ளடக்கிய வகையிலான பெருந்திரலான பொது மக்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
