
தேர்தலை முன்னிட்டு இலங்கைக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பிரஜைகள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தமது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கியுள்ளது.
செப்டம்பர் 21, 2024 அன்று திட்டமிடப்பட்ட தேர்தலுக்கு முன் அல்லது அதற்குப் பின்னர் ஆர்ப்பாட்டங்கள் நிகழலாம் என்றும் ஆலோசனையுடன் கூடிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை கலைக்க பொலிசார் பல்வேறு நடவடிக்கைகள் உட்பட கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
மேலும் அமெரிக்க குடிமக்கள் கூட்டங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள், பயணிகள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், குறிப்பாக சுற்றுலா இடங்கள் மற்றும் நெரிசலான பொது இடங்களில், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், நடைமுறைப்படுத்தவும், உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்கவும், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்க தேவையான திட்டங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
